தலாய்லாமாவின் 82-வது பிறந்த நாளை கொண்டாடிய திபெத்தியர்கள்
புத்த மத தலைவர் தலாய்லாமாவின் 82-வது பிறந்த நாளை திபெத்தியர்கள் கொண்டாடினர்.
புதுடெல்லி,
தலாய்லாமா திபெத்தியர்களால் உயிருள்ள கடவுளாக போற்றப்படுகிறார். இந்த நிலையில் அவருடைய பிறந்த நாளையொட்டி திபெத்தில் உள்ள லெவின் பகுதியில் திபெத்தியர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் அவர் நீண்ட நாள் வாழவும் சிறப்பு பிராத்தனை நடத்தினர். இந்த விழாவில் திபெத்திய பிரதமர் லோப்சங் சங்கேயும் கலந்து கொண்டார்.
தலாய்லாமாவின் நெறிமுறைகள், அஹிம்சை, சமாதானம், மத நல்லிணக்கம் ஆகியவை ஆகும். அவர் 20-ம் நூற்றாண்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
தலாய்லாமா திபெத்தில் உள்ள டக்க்செர் குக்கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் பிறந்தார்.
1959-ம் ஆண்டு சீனாவிற்கு எதிராக குரல் கொடுத்து திபெத்தி விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். 1989-ம் ஆண்டு தலாய்லாமாவிற்கு அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து சீனாவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்தியாவில் சுமார் 1,00,000 லட்சம் திபெத்தியர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.