சிக்கிம் எல்லைப் பிரச்சினையை பேசித் தீர்க்கலாம் - இந்தியா

சிக்கிம் மாநிலத்தின் சீன எல்லையில் 19 நாட்களாக நீடித்துவரும் பிரச்சினையை பேசித் தீர்க்கலாம் என்று இந்தியா கூறியுள்ளது.

Update: 2017-07-05 20:27 GMT
புதுடெல்லி

அதற்கு முன்னதாக பூடானின் எல்லைப்பகுதியிலிருந்து சீனா வெளியேற வேண்டும் என்று பாதுகாப்புத் துணையமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்தார். “ தூதரக மட்டத்தில் இப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நினைக்கிறேன். சீனப்படைகள் முன்பு எங்கிருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும். சீனா பூடான் எல்லைக்குள் வருகின்றன. நாங்கள் அவர்களை வரவேண்டாம் என்று கூறுகிறோம். இது எங்கள் பாதுகாப்பு தொடர்பானது. இதுவே எங்கள் நிலைப்பாடு. பூடான் அரசர் சீனா அந்த நாட்டின் எல்லைக்குள் வருவதாக அறிக்கை விடுத்துள்ளார்” என்றார் பாம்ரே.

பாம்ரேவின் வார்த்தைகள் இந்தியா பஞ்சசீலக் கொள்கைகளை மீறுவதாக சீனா குற்றஞ்சாட்டிய பின்னர் ஒரு நாள் கழித்து வெளிவந்துள்ளது. இந்தியாவிற்கான சீனத் தூதர் லுவோ ஸாவோஹூய் தன் நாடு சமரசம் ஏதும் செய்துக்கொள்ளாது என்றும் இந்த ஆபத்தான சூழலை இந்தியாதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். 

இந்தியா, பூடான் மற்றும் சீனா சந்திக்கும் மும்முனைப்பகுதியில் சீனத் துருப்புகள் சாலை அமைக்க வந்தபோதுதான் பிரச்சினை எழுந்தது. 

பூடானின் தோகாலாம் எனும் பகுதி இந்தியப் பெயரான் தோகா லா என்பதேயாகும். ஆனால் சீனா இதைத் தனது டோங்லாங் பிரதேசத்தின் ஒரு பகுதி என்கிறது. சீனாவும் பூடானும் இது பற்றி பேசி வந்தாலும் இரு நாடுகளுக்கும் தூதரக உறவில்லை. பூடானின் பாதுகாப்பும், தூதரக உறவுகளும் இந்தியாவின் பொறுப்பாகும். 

இப்பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத் துறை, “ சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா ஆழமாக கவலைக்கொண்டுள்ளது. சாலை அமைப்பது போன்ற கட்டுமான பணிகள் இப்போதைய நிலையில் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்தும். அவை இந்தியாவின் பாதுகாப்பு நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்