இந்தியாவிலுள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது ரிசர்வங்கி
இந்தியாவிலுள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது என ரிசர்வங்கி வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்து உள்ளது.
இந்தியாவின் தொழிற்சாலைகள், தொழிற்வளர்ச்சிகள் குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டது. 2016-17 ஆண்டில் எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முடிவுகளின் அடிப்படையில் நாட்டிலேயே அதிகளவிலான தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாகத் ‘தமிழ்நாடு’ உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், அதிகளவில் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடம் வகித்தாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாடு குஜராத் மாநிலத்தில்தான் அதிகளவில் உள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில்தான் தொழிற்சாலைகள் மூலம் முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது என்றும் குஜராத்துக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் குஜராத் மூன்றாமிடத்திலேயே உள்ளது. இந்தியாவிலுள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16 சதவீதம் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் உள்ளன 44.03 லட்சம் உள்ளன. தொடர்ந்து மேற்கு வங்கம் (34.64 லட்சம்), தமிழ்நாடு (33.13 லட்சம்), மகாராஷ்டிரா (30.63 லட்சம்) உள்ளன.