பிறந்தநாள் விழாவிற்கு சென்ற மாணவி உடன் படிக்கும் மாணவர்களால் பலாத்காரம்

நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற மாணவி உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2017-07-04 05:25 GMT

ஐதராபாத்,

ஐதராபாத்தின் கம்மாம் பகுதியை 17 வயது கல்லூரி மாணவி நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஞாயிறு அன்று சென்று உள்ளார். நிகழ்ச்சி நடந்த இடத்தில் மாணவி உடன் படிக்கும் 4 மாணவர்களால் கூட்டு பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். குற்றவாளிகள் முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்து உள்ளனர். இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கம்மாம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றாவாளிகளை தேடிவருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்