இது நாட்டின் மிக முக்கியமான தருணம்-ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் பிரணாப் முகர்ஜி உரை

இது நாட்டின் மிக முக்கியமான தருணம் என ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

Update: 2017-06-30 18:40 GMT
புதுடெல்லி,

ஜிஸ்டி அறிமுக விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

நிதியமைச்சராக இருந்த போது ஜிஎஸ்டி உருவாக்கத்தில் நான் பெரிய அளவில் பங்காற்றியுள்ளேன். 14 வருட ஜிஎஸ்டி பயணம், பயனை எட்டும் நேரம் வந்துள்ளது. ஜிஎஸ்டி நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒன்று.

ஜிஎஸ்டி அறிமுகம் நாட்டின் வரலாற்றில் முக்கிய அத்தியாயம். ஜிஸ்டி அறிமுகம் நாட்டின் வரலாற்றில் புதியஅத்தியாயத்தை தொடங்கி இருக்கிறது. ஜிஎஸ்டிக்கு நான் கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கினேன். ஜிஎஸ்டிக்கு ஒப்புதல் அளித்ததை பெருமையாக கருதுகிறேன். ஜிஎஸ்டி நாட்டின் எற்றுமதி திறனை மேம்படுத்தும். அரசியலமைப்பு சட்டப்படி ஜிஸ்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்