கர்நாடகாவில் இன்று 201 பேருக்கு கொரோனா
ஒருவர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 833 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில், 60 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.