யோகி ஆதித்யநாத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுத்ததையடுத்து அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-26 07:13 GMT

புதுடெல்லி,

2007 ஆம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக யோகி ஆதித்யநாத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தர பிரதேச அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு மாநில அரசு அனுமதி மறுத்தது.

இதனால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 2018- ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக விசாரணை நடத்த மாநில அரசு அனுமதி மறுத்ததில் எந்த நடைமுறை தவறுகளும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டடது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, ஹிமா கோலி, ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், மாநில அரசு அனுமதி வழங்கும் விவகாரத்தில் உள்ள சட்ட ரீதியான கேள்விகளுக்குள் செல்ல வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை. எனவே இந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்