பெங்களூருவில் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்

பெங்களூருவில் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-12-11 18:45 GMT

சம்பிகேஹள்ளி:

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றுபவர்கள் ராஜேஸ் மற்றும் நாகேஷ். இவர்கள் 2 பேரும் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் முன்பாக வியாபாரத்திற்காக வந்திருந்த தம்பதியை மிரட்டி போலீஸ்காரர்களான ராஜேஸ் மற்றும் நாகேஷ் ரூ.1,000 வாங்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த தம்பதி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததில், தம்பதியை மிரட்டி 2 போலீஸ்காரர்களும் பணம் வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து, சம்பிகேஹள்ளி போலீஸ் நிலைய போலீஸ்காரர்களான ராஜேஸ் மற்றும் நாகேசை பணி இடைநீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 2 போலீஸ்காரர்கள் மீதும் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்