மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறுவதை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற 2 பேர் கார் விபத்தில் பலி

மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறுவதை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

Update: 2023-06-17 20:49 GMT

பெலகாவி:

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதாவில் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறுவதாக கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெலகாவியில் மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறிய கர்நாடக அரசை கண்டித்து நேற்று விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க பெலகாவி தாலுகா சிவப்புரா கிராமத்தில் உள்ள முப்பின காடசித்தேஸ்வர மடத்தின் மடாதிபதி காதி சித்தேஸ்வர் சுவாமி ஒரு காரில் மடத்தின் ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றார். அப்போது காகாதி அருகே ஹோனகா கிராமம்

அருகே வந்த போது முன்னால் சென்ற ஒரு லாரியின் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் காரை டிரைவர் பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரியும் கார் மீது மோதியது. இதில் இரு லாரியின் இடையில் சிக்கிய கார் உருக்குலைந்து போனது.

இந்த கோர விபத்தில் சுவாமியின் சீடர், கார் டிரைவர் உள்பட 2 ஊழியர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த மடாதிபதி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் விசாரணையில், பலியான சீடர் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் தேலவாடி கிராமத்தை சேர்ந்த பஞ்சாக்ஷரி ஹிரேமத் , கார் டிரைவர் பாண்டுரங்க ஜாதவ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த விபத்து பற்றி காகாதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்