கேரளா: வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த வீட்டில் வெடிவிபத்து; தந்தை-மகன் பலி
வெடிகுண்டு வெடித்ததில் 2 பேரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருவனந்தபுரம்,
அசாம் மாநிலம் கன்னூர் மாவட்டம் சவ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் 5 பேர் வாடகைக்கு குடியிருந்தனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த தந்தை பைசல் ஹைக் (வயது 50), அவரது மகன் ஷஹிதுல் (வயது 22) ஆகியோரும் அந்த வாடகை வீட்டில் குடியிருந்தனர்.
பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்துவந்த இவர்கள் பல்வேறு பகுதிகளில் சேமிக்கப்பட்ட பழைய பொருட்களை தாங்கள் வசித்தும் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த வீட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பைசல் ஹைக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் ஷஹிதுல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெடிகுண்டு வெடித்ததிலேயே தந்தை மகன் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு தயாரிப்பின் போது இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.