வீட்டுவாடகை, தேர்வுக்கான பயிற்சி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 40 ஆயிரம் திருடிய இரு இளைஞர்கள் கைது

மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து ரூ. 40,000 அடங்கிய பையை பறித்ததற்காக இரண்டு இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-07-19 22:29 GMT

ஜபல்பூர்,

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவரிடம் இருந்து ரூ. 40,000 அடங்கிய பையை பறித்ததற்காக இரண்டு இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர்.

கிராமத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பிரதான் மந்திரி அவா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு தம்பதியினர் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 40,000 பணத்தை எடுத்த பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையோர வியாபாரியிடம் பழங்கள் வாங்க தம்பதிகள் நின்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்தப் பெண்ணிடம் இருந்து பணம் இருந்த பையைப் பறித்துச் சென்றனர்.

பின்னர் இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சுபம் சுக்லா என்ற அர்பன் (19) மற்றும் அபிஷேக் சுக்லா என்ற பச்சி (18 வயது) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரேவா மாவட்டத்தில் உள்ள மிசிரிஹா கிராமத்தில் வசிப்பவர்கள்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போட்டித் தேர்வுக்கான பயிற்சிக் கட்டணம் மற்றும் வீட்டு வாடகையைச் செலுத்துவதற்காக தாங்கள் இந்த குற்றத்தைச் செய்ததாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்து பணத்தை கைப்பற்றிய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்