பீகாரில் விஷ சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு
பீகாரில் விஷ சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.;
முசாபர்நகர்,
பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது. அப்போதில் இருந்து அங்கு சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்கப்படுவதும், அதனால் உயர்பலிகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள காசி முகமதுபூர் பகுதியை சேர்ந்த பலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி குடித்தனர். இதில் அவர்களது உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களில் 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு கண் பார்வை பறிபோனது.