மராட்டியம்: ரூ.4.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேர் கைது

மராட்டியம்த்தில் ரூ.4.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-18 04:10 GMT

மும்பை,

குர்லாவில் உள்ள எல்பிஎஸ் சாலையில் போதை பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவின் ஐந்தாம் பிரிவு போலீசார்  அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 3.070 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஷிரிஷ் தாட்கே (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பந்த்ராவில் மேலும் ஒருவர் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று தாட்கேக்கு போதைப்பொருள் சப்ளை செய்த திலீப் காரத்மோல் (47) என்பவரை போலீசார் கைது செய்து இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்