16 மாநிலங்களில் 195 வேட்பாளர்கள்: பா.ஜ.க. வெளியிட்ட பட்டியலின் முழு விவரம்
மத்தியில் ஆளும் பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில், பா.ஜ.க வேட்பாளர் பட்டியலையே வெளியிட ஆரம்பித்துள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய அளவில் முதல் கட்சியாக மத்தியில் ஆளும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் என மொத்தம் 18 இடங்களில் பல்வேறு தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை காணலாம்
- உத்தர பிரதேசம்: 51
- மேற்கு வங்காளம்: 20
- மத்திய பிரதேசம்: 24
- குஜராத்: 15
- கேரளா:12
- தெலுங்கானா: 9
- அசாம்: 11
- ஜார்க்கண்ட்: 11
- சத்தீஷ்கர்: 11
- டெல்லி: 5
- ஜம்மு காஷ்மீர்: 2
- உத்தரகாண்ட்: 3
- அருணாசல பிரதேசம்; 2
- கோவா: 1
- திரிபுரா; 1
- அந்தமான்;1
- டையூடாமன்:1
பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 34 மத்திய மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். பெண்வேட்பாளர்கள் 28 பேரும், இளம் வேட்பாளர்கள் 47 பேரும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.