இந்தியாவில் ஒரே நாளில் 1,690 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-11 04:08 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 2,109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 1,690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,74,909 லிருந்து 4,49,76,599 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,406 லிருந்து 19,613 ஆக குறைந்தது.ஒரே நாளில் 3,469 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,25,250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,722 லிருந்து 5,31,736 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்