ஸ்மார்ட் போன் மோகம்: ரத்தத்தை விற்க முயன்ற 16 வயது சிறுமி...!

ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக ரத்த வங்கியில் தனது ரத்தத்தை விற்க முயன்ற கொல்கத்தாவை சேர்ந்த 16 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-19 14:53 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் பலூர்காட் மாவட்டத்தில் உள்ளது ரத்த வங்கி. கடந்த 17-ம் தேதி காலை 16 வயது சிறுமி ஒருவர் டியூஷனை கட் செய்துவிட்டு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு டபானிலிருந்து பலூர்காட்டிற்கு பஸ்சில் வந்தார்.

பின்னர் அவர் ரத்த வங்கி மருத்துவமனைக்கு சென்று ரத்த வங்கியில் கனாக் குமார் தாஸ் என்பவரிடம் சிறுமி ரத்தத்தை விற்க வேண்டும் என்றார்.

இதை கேட்டதும் குமார் தாஸ் அதிர்ச்சி அடைந்தார். உறவினருக்கு ரத்தத்தை வாங்க வந்திருப்பதாக நினைத்தேன். ஆனால் நீ ரத்தத்தை விற்க வந்தேன் என்கிறாயே என கேட்டுள்ளார். அப்போதுதான் அந்த சிறுமி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவரால் ஸ்மார்ட் போனை காசு கொடுத்து வாங்க முடியாததால் ரத்தத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் போனை வாங்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறுவர் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்அங்கு அதிகாரிகள் விரைந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோரை அழைத்து சிறுமி குறித்த தகவல்களை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகள் வீட்டை விட்டு சென்ற போது நான் வீட்டில் இல்லை. ரத்தத்தை விற்றால் பணம் கிடைக்கும் என்ற ஐடியா அவருக்கு எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை என்றார்.

சிறுமியின் தந்தை காய்கறி வியாபாரி, தாய் இல்லத்தரசி. சிறுமிக்கு 4 ஆம் வகுப்பில் படிக்கும் தம்பி உள்ளார். அந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் கவுன்சலிங் செய்யப்பட்டார்.

அப்போது அவர் தனது தம்பியின் சிகிச்சைக்காக தான் எனது ரத்தத்தை விற்க வந்ததாக தெரிவித்தார். தன்னுடைய உறவினரின் செல்போனில் இருந்து ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்ததாகவும் அதற்கு கேஷ் ஆன் டெலிவரிக்கு பணம் கொடுக்க ரத்தத்தை விற்க வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்த போனின் விலை ரூ 9 ஆயிரம் என்றும் அதை ஞாயிற்றுக்கிழமை ஆர்டர் செய்ததாகவும் வியாழக்கிழமை டெலிவரி கிடைத்து விடும் என்றும், பெற்றோரிடம் பணம் இல்லாததால் எனது ரத்தத்தை விற்று பணம் செலுத்தலாம் என வந்தேன் என்றார். இவர் கூறுவதை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள், அவருக்கு கவுன்சலிங் செய்து வீட்டிற்கு பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

ஆன்லைனில் ரூ9000 மதிப்பிலான போன் ஆர்டர் செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணத்தை திரட்டுவதற்காக சிறுமி இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்