சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

பெங்களூருவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-20 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூரு எலகங்கா கோகிலு கிராஸ் மாருதி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காசு வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் கட்டிடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு காசு வைத்து சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 16 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்