அதிக பாரம் ஏற்றி சென்ற 15 லாரிகள் பறிமுதல்

பணகுடியில் அதிக பாரம் ஏற்றி சென்ற 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-04-19 21:27 GMT

பணகுடி:

பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் போலீசார் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணகுடி வழியாக வந்த டாரஸ் லாரிகளை சோதனை செய்தனர். அப்போது முறையான அரசு அனுமதியின்றி குண்டுக்கற்களை ஏற்றி சென்றதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி சென்றதாகவும் வழக்குப்பதிவு செய்து 15 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்