திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் விபத்து: 5 பெண்கள் உள்பட 11 பேர் பலி

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-05-04 05:31 GMT

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டம் சோரம்பட்கன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் நேற்று இரவு கன்கீர் மாவட்டம் மார்கொட்லா கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பொலிரோ காரில் சென்றனர்.

ஜக்தரா என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்