நிதிஷ் குமார், ராப்ரி தேவி உள்ளிட்ட 11 பேர் பீகார் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வு

தொடர்ந்து 4-வது முறையாக பீகார் மாநில சட்ட மேலவைக்கு நிதிஷ் குமார் தேர்வாகியுள்ளார்.

Update: 2024-03-14 12:45 GMT

பாட்னா,

பீகார் மாநில சட்ட மேலவையில் உள்ள 11 இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தொடர்ந்து 4-வது முறையாக மாநில சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைமைச் செயலகத்திற்குச் சென்று தனது சான்றிதழை அவர் பெற்றுக்கொண்டார்.

அதே போல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவி (ஆர்.ஜே.டி.), மாநில மந்திரி சந்தோஷ் சுமன் (எச்.ஏ.எம்.) மற்றும் முன்னாள் மந்திரி மங்கள் பாண்டே (பா.ஜ.க.) உள்ளிட்டோர் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்