இந்திய ஒற்றுமை யாத்திரை; ராகுல் காந்தி ஆதரவாளர்கள் கடும் குளிரில் மேல்சட்டையின்றி நடனம்

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10 நபர்கள் மேல் சட்டையின்றி, தலையில் டர்பன் அணிந்தவாறு நடனமாடினர்.

Update: 2023-01-08 10:47 GMT

சண்டிகர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது அரியானாவை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில் அரியானாவின் கர்னல் பகுதியில் கடுமையான பனிமூட்டத்திற்கு நடுவே, ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் ஆதவாளர்கள் சிலர் மேல் சட்டையின்றி, தலையில் டர்பன் அணிந்தவாறு நடனமாடினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வருகின்றன.

இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் சூழலில், ராகுல் காந்தி குளிரைத் தாங்கும் உடைகளை அணியாமல், தனது இயல்பான உடைகளிலேயே நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் மேல்சட்டையின்றி நடனமாடியுள்ளனர்.

முன்னதாக குளிரைத் தாங்கும் உடைகளை அணியாதது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "என்னிடம் இந்த கேள்வியை தொடர்ந்து பலர் கேட்கிறார்கள். ஆனால் விவசாயிகளிடமோ, தொழிலாளர்களிடமோ அல்லது ஏழைக் குழந்தைகளிடமோ இந்த கேள்வியை யாரும் கேட்பதில்லை" என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்