ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2,500 மெட்ரிக் டன் கோதுமை வழங்கிய இந்தியா

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

Update: 2022-07-03 04:41 GMT

Image Courtesy : ANI 

பஞ்சாப்,

நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை வழங்குவதாக உறுதியளித்துள்ள இந்தியா, பகுதி பகுதியாக கோதுமையை அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்தியா நேற்று மேலும் 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

இதோடு சேர்த்து இதுவரையில் மொத்தம் 36,000 டன் கோதுமை ஏற்றுமதியை இந்தியா நிறைவு செய்துள்ளது. அட்டாரி-வாகா எல்லை வழியாக லாரிகளில் கோதுமையை இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்