“மின்வெட்டு இல்லாததற்கு பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தான் காரணம்” தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்
“தமிழகத்தில் மின்வெட்டு இல்லாததற்கு பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தான் காரணம்” என்று தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை பழையகாயல், முக்காணி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. முந்தைய ஆட்சி காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி நிவர்த்தி செய்து தற்போது பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
அவர் தொடர்ந்து நல்ல திட்டங்களை கொண்டுவரவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் மீண்டும் பிரதமராக வர வேண்டும். பலம் பொருந்திய நாடாக இந்தியா மாறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார். அதற்கு ஆதரவாக அ.தி.மு.க. இருந்து வருகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து பல திட்டங்களை நிறைவேற்றி தந்தார். வரும் 2020-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை மோடி அரசு உருவாக்கும். பயிர் காப்பீடு திட்டம் மூலம் 26 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர்.
தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. தற்போது மின்வெட்டு இல்லை. காரணம் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், மத்தியில் பா.ஜனதாவும் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.