வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Update: 2019-08-09 03:58 GMT
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.  முதல் சுற்று நிலவரத்தில், அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்று இருந்தார்.  

அதிமுக முன்னிலை

தொடர்ந்து சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.  அதிமுக 51,869வாக்குகளும்  திமுக 50,446  வாக்குகளும் பெற்றுள்ளது. திமுகவை விட அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது.  நாம் தமிழர் கட்சி 520 வாக்குகள் பெற்றுள்ளது.

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேலும் செய்திகள்