ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகதான் இருக்க வேண்டும்: சீமான்
நான் சர்வாதியாக இருக்கிறேன் என்று சீமான் கூறினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகதான் இருக்க வேண்டும். சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலையும் சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள், அன்பான சர்வாதிகாரியாக தான் இருந்துள்ளார்கள்.
கட்சி என்றால் ஒரு விதிமுறை உள்ளது; அதற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். கட்சி விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை. நான் சர்வாதியாக இருக்கிறேன் என்றால் போய்விடு.
மது தொடர்பான வழக்கில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிமன்றம் சொல்கிறது; நீட் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு என்றால் அதனை ஏற்க மறுத்து, தேர்வு எழுத சொல்கிறது; ஒரே நீதிமன்றம் தான் இரு வேறு தீர்ப்புகளை சொல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.