7 மாத குழந்தையுடன் ரெயிலுக்கு அடியில் சிக்கிய தாய், தந்தை.. திண்டிவனத்தில் பரபரப்பு

செந்தூர் அதிவிரைவுரெயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச்சென்றது

Update: 2024-11-14 18:50 GMT

விழுப்புரம் ,

திருவண்ணாமலை மாவட்டம் தெல்லார் கிரமத்தை சேர்ந்தவர் சங்கர்.இவருடைய மகள் கோமதி மருமகன் மணிகண்டன் மற்றும் 7 மாத கைக்குழந்தை கிருத்திகா ஆகியோருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக திண்டிவனம் ரெயில் நிலையத்தில் காத்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த செந்தூர் அதிவிரைவு ரெயிலில் பொதுப் பெட்டியில் முண்டியடித்து கொண்டு ஏற முயன்றனர்.

அப்போது முன்அறிப்பின்றி திடிரென ரெயில் கிளம்பியதால் நிலைதடுமாறி கால் இடறி ,தண்டவாளத்தின் இடையே 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இதை கண்ட பயணிகள் உடனே அபாயச் சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனால் மூவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் ஆத்திரமடைந்த பயணிகள் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் ஏறுவதால், கூடுதல் நேரம் ரெயிலை நிறுத்தக்கோரி செந்தூர் அதிவிரைவு ரெயிலின் ஓட்டுநருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செந்தூர் அதிவிரைவுரெயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச்சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்