வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வேலூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் போட்டியிட 2-வது நாளான நேற்றும் வேட்புமனுக்களை யாரும் தாக்கல் செய்யவில்லை.
வேலூர்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு அதே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் 27-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் 29-ந் தேதி ஆகும்.
அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ராமனிடமும், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் வழங்க தொடங்கிய நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 2-வது நாளான நேற்று யாராவது வேட்பு மனுதாக்கல் செய்ய வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை வரை வேட்பு மனுதாக்கல் செய்ய யாரும் வரவில்லை.
இதேபோல குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.
எனினும் மனுதாக்கல் தினத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.