சித்திரை திருவிழா முடிந்து கோவிலை அடைந்தார் கள்ளழகர்

பரமக்குடியில் சித்திைர திருவிழா முடிந்து கள்ளழகர் கோவிலை அடைந்தார்.

Update: 2022-04-20 13:09 GMT
பரமக்குடி, 
பரமக்குடியில் சித்திைர திருவிழா முடிந்து கள்ளழகர் கோவிலை அடைந்தார்.
திருவிழா
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா நடந்தது. 15-ந் தேதி பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 
சித்திரை திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை 9.30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு நகர்வலம் வந்தார். நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போது பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஆரவாரத் துடன் கள்ளழகரை வரவேற்று தரிசித்தனர். 
சிறப்பு பூஜை
பின்னர் மாலை 6.30 மணிக்கு கோவிலை சென்றடைந்தார். அங்கு கருப்பண சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பெருமாளுக்கு விசேஷ சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு கண்ணாடி சேவை நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து பெருமாள் கண்ணாடி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்