‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-01 17:16 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்தவர் அம்ஜத். இவர், கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் முதலியார்பட்டி காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் புளியமரத்தின் கிளை முறிந்து ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் படத்துடன் செய்தியாக வெளியானது. அதற்கு உடனடி தீர்வாக மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பஸ் நிலையத்தில் நாய்கள் தொல்லை
நெல்லை புதிய பஸ்நிலையத்தின் உள்ளே, நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளை அச்சுறுத்தும் வண்ணம், நடைமேடைகளில் அவை திரிகின்றன. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு சுற்றித் திரியும் நாய்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -சு.சிவசண்முகவேல், பெருமாள்புரம்.
நெல்லை மேலப்பாளையம் ராஜா நகர் 5-வது தெருவில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டுகின்றன. எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -சிவா, மேலப்பாளையம்.
ஆபத்தான மரக்கிளை

பாளையங்கோட்டை சேவியர் பள்ளி அருகே ரோட்டின் ஓரம் அமைந்துள்ள மரத்தில் கிளை முறிந்து கடந்த 3 நாட்களாக ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து மரக்கிளையை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ராஜா, பாளையங்கோட்டை.
பள்ளம் மூடப்படுமா?
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து ஆரைக்குளம்- அடைமிதிப்பான்குளம் செல்லும் சாலையில் ஆரைகுளம் அருகே சாலையின் மத்தியில், சாலைைய தோண்டி போட்டவாறு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தவசிங், ஆரைக்குளம்.
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் திருக்குமரன். இவர், கடையம் யூனியன் அம்பாநகர் சுகாதார வளாகம் எதிரே சாலையோரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. அதன் எதிரொலியாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான பயணம்

கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் கிராமத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், சேர்ந்தமரம் கிராமத்துக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படாததால், புளியங்குடியில் இருந்து சுரண்டை அரசு கல்லூரிக்கு செல்லும் பஸ்சில் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே, சுரண்டையில் இருந்து சேர்ந்தமரம் கிராமத்துக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
 -மணிகண்டன், சேர்ந்தமரம்.
குடிநீர் வருமா?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு தென்றல் நகரில் ஏராளாமனோர் உள்ளனர். இங்குள்ள வீ்டுகளுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் வழங்கப்படவில்லை. கடந்த ஒரு வருடத்துக்கு முன்னதாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பபட்டது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலை உள்ளது. எனவே, முன்பு போல் இப்பகுதிக்கு குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
 -வெள்ளத்துரை, தென்றல்நகர்.
சாலை வசதி
கோவில்பட்டி நகராட்சி 10-வது வார்டு செல்லப்பாண்டி நகரில் முத்தையா மால் தெரு, ஆழ்வார் தெரு போன்ற பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காளியப்பர் தெருவில் இன்னும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படவில்லை. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
 -நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.

மேலும் செய்திகள்