மேக்கரை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

கடையநல்லூர் அருகே மேக்கரை வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

Update: 2022-03-14 20:35 GMT
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடங்களில் கோடை வெயிலால் இலைகள், சருகுகள் காய்ந்து கிடக்கின்றன. இந்தநிலையில் கடையநல்லூர் வனச்சரகம் மேக்கரை பீட்டுக்கு உள்ளிட்ட வெள்ளக்கல்தேரி பகுதியில் காய்ந்த சருகுகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. இதனால் வடகரை, அச்சன்புதூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு புகை மூட்டமாக தென்படுகிறது. தீயில் கருகிய இலைகள் சாம்பலாக காற்றில் பறந்து வருகிறது
தகவல் அறிந்ததும் வன ரேஞ்சர் சுரேஷ் உத்தரவின் பேரில் கடையநல்லூர் வனபிரிவு வனவர்கள் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 25-க்கும் மேற்பட்ட வனக்குழுவினர்கள் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். காட்டுத்தீயில் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகும் அபாயம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்