பொள்ளாச்சியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கம்

வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கம்

Update: 2021-07-04 17:47 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. 

பஸ்கள் இயக்கம் 

பொள்ளாச்சியில் உள்ள புதிய மற்றும் மத்திய பஸ் நிலையங் களில் இருந்து சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, சேலம், தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ்கள் இயக்கப்பட்டது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற் போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால்,  பஸ்கள் இயக்கப்படுகிறது. 

சுத்தப்படுத்தும் பணி 

அதன்படி பொள்ளாச்சியில் இருந்து  உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதை யொட்டி பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் நிறுத்தப் பட்டு உள்ள பஸ்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சியில் இருந்து இன்று முதல் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு 40 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது

எனவே பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருப்பதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

வால்பாறை 

வால்பாறையில் இருந்து  முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு 14 பஸ்களும், பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிக்கு 10 பஸ் களும் இயக்கப்படுகிறது.

இதற்காக இங்குள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டு இருக்கும் பஸ்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. 
 

மேலும் செய்திகள்