சித்தேரி மலை பகுதியில் மான் தோல் பதுக்கியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

சித்தேரி மலை பகுதியில் மான் தோல் பதுக்கியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-06 17:30 GMT
அரூர்:
அரூர் அருகே உள்ள சித்தேரி மலை பகுதியில் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனவர் சாத்தப்பன், வனத்துறையினர் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பிச்சை (வயது 56) என்பவரது மாட்டுக் கொட்டகையில் மான் தோல்  பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பிச்சையின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் மான் தோல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது 10 ஆண்டுகளுக்கு முன்பு மானை வேட்டையாடி தோலை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். மான் தோலை பதுக்கி வைத்திருந்த பிச்சைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்