வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னிமலை அருகே பசுவபட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.

Update: 2021-06-05 21:24 GMT
சென்னிமலை
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் 6 மாத காலமாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாடு முழுவதும் 5-ந் தேதி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னிமலை அருகே பசுவபட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்துக்கு தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்