தேனி பழைய பஸ் நிலையம் மூடல்

ஊரடங்கு விதிமீறலை தடுக்க தேனி பழைய பஸ் நிலையம் மூடப்பட்டது.

Update: 2021-05-26 13:31 GMT
தேனி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு விதியை மீறி வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு போலீசார் வாகன தணிக்கை செய்து வரும் நிலையில், விதிகளை மீறிச் செல்பவர்கள் அருகில் உள்ள பழைய பஸ் நிலையம் வழியாக வாகனங்களில் பயணம் செய்கின்றனர். 
 
இதனால், பழைய பஸ் நிலையத்தின் இருபுற நுழைவு வாயிலையும் மூட போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

அதன்படி, இருபுறமும் உள்ள நுழைவு வாயில் கம்புகள் கட்டியும், இரும்பு தடுப்புகள் வைத்தும் மூடப்பட்டது.

 இதேபோல் தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. இதனால், மதுரை சாலையில் இருந்து பாரஸ்ட்ரோடு செல்லும் சாலை சந்திப்பு பகுதியிலும் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்