பசுமை சுற்றுச்சூழலுக்கான விருது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கல்லூரிக்கு பசுமை சுற்றுச்சூழலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-29 14:27 GMT
பழனி: 

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வித்துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற கல்வி மேலாண்மைக்குழு இயங்குகிறது. 

இந்த குழு நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள கல்லூரிகளில் பசுமை சுற்றுச்சூழல், தூய்மை, நீர்மேலாண்மை விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து ‘ஒரு மாவட்டம், ஒரு பசுமை சாம்பியன்' என்ற விருதை வழங்கி வருகிறது.


இந்த ஆண்டுக்கான விருது திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருது பெற்றதற்காக கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளரும், பழனி கோவில் செயல்அலுவலருமான கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்