தாம்பரத்தில் 12 இடங்களில் நிரந்தர தடுப்பூசி மையங்கள் தினமும் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்

தாம்பரத்தில் 12 இடங்களில் நிரந்தர தடுப்பூசி மையங்கள் தினமும் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் நகராட்சி ஆணையாளர் தகவல்.

Update: 2021-04-28 04:42 GMT
தாம்பரம், 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் நகராட்சியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டி விட்டது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் நகராட்சிக்குட்பட்ட 12 இடங்களில் நிரந்தர தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் சித்ரா கூறுகையில், தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 750 பேருக்கும், பூண்டி பஜார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 800 பேருக்கும், பட்டேல் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 450 பேர் வீதம் மொத்தம் 2 ஆயிரம் பேருக்கும் தினந்தோறும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்