வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு படையெடுத்த பக்தர்கள்

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு படையெடுத்த பக்தர்கள்

Update: 2021-04-27 19:55 GMT
மதுரை
மதுரை அழகா்கோவில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு விழாவாக கருதப்படுவது கள்ளழகா் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் தான். இதனை காண உள்ளூா், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழா கடந்தாண்டை போன்று இந்தாண்டும் கொரோனாவால் தடைப்பட்டு விட்டது. எனவே நேற்று வைகை ஆற்றில் பல லட்சம் பக்தா்களின் வெள்ளத்தின் மத்தியில் நடைபெறக்கூடிய விழா ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் எளிமையாக நடந்தது. ஆனால் இதற்காக வேண்டிக்கொண்ட பக்தா்கள் நேற்று காலை மதுரை வைகை ஆற்றின் கல்பாலம், ஓபுளாபடித்துறை பாலம் வழியாக குடும்பம், குடும்பமாக ஆழ்வார்புரம் பகுதிக்கு வந்தனர்.
அவா்கள் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் இறங்கி கள்ளழகரை நினைத்து பூஜை செய்தனா். ஒரு சிலா் தாங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி செம்பில் சர்க்கரை நிரம்பி சூடம் காண்பித்து வழிபட்டனர். மேலும் கள்ளழகர் வேடமணிந்து வந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினா். கொரோனா அச்சமின்றி பக்தர்கள் அதிக அளவில் வந்து வைகை ஆற்றை நோக்கி படையெடுத்து வந்ததால் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

மேலும் செய்திகள்