சங்ககிரி சந்தைப்பேட்டை செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா: பூங்கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

பூங்கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

Update: 2021-03-30 23:20 GMT
சங்ககிரி:
சங்ககிரி சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை 7 மணி அளவில் வி.என்.பாளையத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பக்தர்கள் பூங்கரகம், அக்னி சட்டி ஊர்வலமாக வந்தனர். அப்போது பக்தர்கள் சிலர் காளி வேடம் அணிந்தும் பங்கேற்றனர். ஊர்வலம் வி.என்.பாளையம், சேலம் மெயின் ரோடு, பழைய பஸ் நிலையம், பழைய எடப்பாடி ரோடு, மலையடிவாரம், தேர் வீதி, சந்தைப்பேட்டை வழியாக கோவில் வளாகத்தை அடைந்தது. தொடர்ந்து செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்