அவல்பூந்துறை அருகே ரோட்டோரம் நின்றவர்கள் மீது கார் பாய்ந்தது; 2 பேர் பலி 10 பேர் படுகாயம்

அவல்பூந்துறை அருகே ரோட்டோரம் நின்றவர்கள் மீது கார் பாய்ந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்தார்கள்.

Update: 2021-03-30 21:20 GMT
அவல்பூந்துறை அருகே ரோட்டோரம் நின்றவர்கள் மீது கார் பாய்ந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்தார்கள். 
கார் மோதியது
அவல்பூந்துறை அருகே உள்ள கொளாங்காட்டுவலசு வடக்கு வெள்ளியம்பாளையம் பகுதியில் ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 11.30 மணி அளவில் அந்த பகுதி பொதுமக்கள் பலர் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு சென்றார்கள். 
கோவில் அருகே சென்றதும், முன்னால் சென்றவர்கள் பலர் தீர்த்தம் ஊற்ற கோவிலுக்குள் சென்றுவிட்டார்கள். பின்னால் வந்தவர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோார் ஈரோடு-பழனி மெயின் ரோட்டு ஓரம் நின்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஈரோட்டில் இருந்து அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் ரோட்டோரம் இருந்த 15-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களை மோதி சேதப்படுத்தியது. மேலும் நிற்காமல் அங்கு நின்றுகொண்டு இருந்தவர்களின் மீது மோசமாக பாய்ந்து மோதியது.
2 பேர் பலி
கார் மோதியதில் படுகாயம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40), கண்ணம்மாள் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள். மேலும் 10 பேர் கை, கால்கள் முறிந்து உடலில் பல பாகங்களில் படுகாயம் ஏற்பட்டு துடித்தார்கள். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்ைசக்காக 108 ஆம்புலன்சில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். 
விபத்து நடந்ததும் காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
கோவில் திருவிழாவுக்கு வந்த 2 பேர் கார் மோதி பலியானதும், 10 பேர் படுகாயமடைந்ததும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த

மேலும் செய்திகள்