அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.71 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.71 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

Update: 2021-03-30 18:23 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.71 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதை உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி இரவு முதல் 29-ந் தேதி காலை வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதை உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.71 லட்சத்து 6 ஆயிரத்து 437-ம், 171 கிராம் தங்கமும், 393 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

மேலும் செய்திகள்