ஏரலில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏரல் பகுதியில் முன்கார் சாகுபடிக்கு தாமிரபரணியில் தண்ணீர் திறந்தவிட வலியுறுத்தி நேற்று விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-03-30 12:46 GMT
ஏரல்:
ஏரல் பகுதியில் முன்கார் சாகுபடிக்கு தாமிரபரணியில் தண்ணீர் திறந்தவிட வலியுறுத்தி நேற்று விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஏரல் பகுதியில் தாமிரபரணி பாசனத்தில் முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஏரல் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
தாமிரபரணியில் தண்ணீர் திறக்க...
ஆர்ப்பாட்டத்தில் சங்க பிரதிநிதிகள் பேசுகையில்,‘ ஏரல் பகுதியில் முன்கார் சாகுபடிக்கு உடனடியாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் பொன்ராஜ், அழ்வை ஒன்றிய தலைவர் தேவாரம், மாவட்ட துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட உதவி தலைவர் ரவிச்சந்திரன், மாரமங்கலம் சமுத்திரம, கடம்பா குளம் ஆயக்கட்டு விவசாய சங்கம் ராமச்சந்திரன், அவ்வை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், லட்சுமிபுரம் ராஜாராம், தமிழ்ச்செல்வன், அதிசயபுரம் சிலுவை முத்து, ஏரல் பெஸ்டி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்