காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா

ஆண்டிப்பட்டியில் காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா நடந்தது.

Update: 2021-03-30 10:51 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 4 நாட்களாக  நடைபெற்றது. விழாவையொட்டி வைகை ஆற்றங்கரையில் இருந்து திருமஞ்சன நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
இதையடுத்து மாவிளக்கு பூஜை, பெண்கள் பொங்கல் வைத்தல் ஆகியவை நடந்தது.
மேலும் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்தனர். 
விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு காளியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக இரவு முழுவதும் பவனி வந்து அதிகாலை கோவிலை வந்தடைந்தது. 
அப்போது பக்தர்கள் இரவில் விழித்திருந்து அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிபாடு செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் காந்திமதிநாதன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்