அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்: திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார்

அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறி திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-29 23:00 GMT
சாதனை திட்டங்கள்

அப்போது வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் குழந்தைகள், இல்லத்தரசிகள், மாணவ-மாணவிகள், முதியவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வரலாறு சொல்லும் அளவுக்கு ஏராளமான சாதனை திட்டங்களை வழங்கி உள்ளது. குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பல்லாண்டு கால கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

மேலும் திருப்பூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடே இருக்கக்கூடாது என்பதற்காக ரூ.1340 கோடி மதிப்பில் 4-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டியின் மூலமாக திருப்பூரின் பல்வேறு பகுதிகள் பொலிவு பெற்று வருகின்றன.மேலும் 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள், வாஷிங்மெசின் என வரும் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் பெண்களுக்கு பயன்படும் வகையிலான அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. அரசு கூறி உள்ளது. எனவே அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்