ராணிப்பேட்டையில் காவல்துறை சார்பில் பசுமை மாரத்தான் போட்டி

ராணிப்பேட்டையில் காவல்துறை சார்பில் பசுமை மாரத்தான் போட்டி

Update: 2021-02-28 13:46 GMT
சராணிப்பேட்டை

பசுமை மாரத்தான் போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையும், பொதுமக்களும் இணைந்து பசுமை மாரத்தான் போட்டி நடத்தினர். 10 வயது முதல் 20 வயது வரை ஒரு பிரிவாகவும், 20 வயது முதல் 35 வயது வரை ஒரு பிரிவாகவும், 35 வயது முதல் 50 வயது வரை ஒரு பிரிவாகவும், 50 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர், 15 கிலோமீட்டர் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கலெக்டர் பரிசு வழங்கினார்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு, பதக்கம், பரிசுகள், மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 

பின்னர் தேர்தல் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில்  துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொற்செழியன், மனோகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்