சங்கரன்கோவிலில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-26 22:08 GMT
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் கடந்த 25-ந் தேதி முதல் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில், போக்குவரத்து பணிமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. கிளை தலைவர் சங்கர்ராஜ் தலைமை தாங்கினார். பார்வர்டு பி்ளாக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், சி.ஐ.டி.யூ. மாரியப்பன், ஐ.என்.டி.யூ.சி. அரசையா, தொ.மு.ச. பண்டாரக்கண்ணு, செல்வகுமார், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தை சேர்ந்த வேல்சாமி, ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும். 1.9.2019 முதல் தற்போது வரை உள்ள நிலுவைதொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் டி.டி.எஸ்.எப். செயலாளர் முருகன், தொ.மு.ச. காந்தி, செந்தில், வீரகுமார், தலைவர் பாண்டியன், கணேசன், சி.ஐ.டி.யூ. சிவகுமார், ஐ.என்.டி.யூ.சி. லட்சுமணன், ம.தி.மு.க. வேல்சாமி, பார்வர்டு ப்ளாக் இருதயராஜ், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்