தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-25 20:32 GMT
தென்காசி:
தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

4-வது நாளாக போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டம் 4-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி நாடார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்.

நடனம் ஆடி மகிழ்ந்தனர்

போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் பாட்டு பாடினர். சிலர் நடனமாடி மகிழ்ந்தனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்