தைப்பூச திருவிழா: பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள்

தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.

Update: 2021-01-22 15:25 GMT
காரைக்குடி,

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்குடி, தேவகோட்டை, ஜெயகொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காவடிகள் ஆங்காங்கே இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக குன்றக்குடி சண்முகநாதன் கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். அங்கு காவடிகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அதன் பின்னர் அங்கிருந்து பாதயாத்திரையாக திருப்பத்தூர், சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, நந்தம், திண்டுக்கல் வழியாக பழனிக்கு செல்வது வழக்கம். இதுதவிர ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தும் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இதையொட்டி சாலையோரங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் நீர், மோர் பந்தல், அன்னதானம் வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து குறைவான பக்தர்களே பாதயாத்திரையாக நடந்து சென்றனர். குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார்கள் சமூகம் சார்பில் அதிகளவு காவடி எடுத்து செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு குறைவான பக்தர்களே காவடி எடுத்து சென்றனர்.

இதேபோல் காரைக்குடி பகுதியில் இருந்து பழனிக்கு 3 காவடிகள் மட்டுமே பக்தர்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். இதுதவிர காரைக்குடி அருகே உள்ள ஜெயகொண்டான் பகுதியில் ஆண்டுதோறும் ரெத்தினவேல் நாட்டார்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட காவடிகளை பக்தர்கள் எடுத்து செல்வது வழக்கம். இந்தாண்டு 101 காவடிகள் மட்டும் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி தலைமையில் பக்தர்கள் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து காவடி எடுத்து சென்ற பக்தர்கள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் தைப்பூசம் வந்துவிட்டாலே காரைக்குடி முதல் பழனி வரை பக்தர்கள் கூட்டம், கூட்டமாக பாதயாத்திரையாக நடந்து செல்வதை பார்க்க முடியும். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பழனி தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. காைரக்குடியில் இருந்து பழனிக்கு 7 நாட்கள் நடந்து செல்வோம்.

இந்த ஆண்டு பழனிக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. அதே போல் காவடி எடுத்து செல்வதும் குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்