கோவையில் 2-வது முழு ஊரடங்கு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு
கோவையில் 2-வது முழு ஊரடங்கால் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை,
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2-வது முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதையொட்டி கோவையில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்து இருந்தன. ஓட்டல்கள், துணிக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.
ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் பழங்கால விளையாட்டுகளை குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். கோவையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடின.
மேலும் ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் அங்கும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கோவையில் ஆம்புலன்ஸ்கள், சரக்கு வாகனங்கள் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. கோவையில் உளள 54 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து எச்சரித்து திருப்பி அனுப்பினர். அதுபோன்று வாகனங்கள் செல்வதை தடுக்க கோவை காந்திபுரம் மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பாலங்களும் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டு இருந்தன.
மேலும் விதிமுறைகளை மீறி வெளியே நடமாடியவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடியதால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் நகரின் பிற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காந்தி மைதானம் நெல்லித்துறை ரோட்டில் உள்ள உருளைக்கிழங்கு மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் அனைத்து மண்டிகளும் மூடிக் கிடந்தன.
அன்னூர்-காரமடை ரோடு, நால்ரோடு பிரிவிலுள்ள வாழைத்தார் மார்க்கெட், பஸ் நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தை ஆகியவை மூடி இருந்ததால் வெறிச்சோடியது. முழு ஊரடங்கையொட்டி மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை மற்றும் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுமுகையிலும் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடியது.