வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 27 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-12 00:43 GMT
ஆலந்தூர், 

கொரோனா வைரஸ் ஊரடங்கால் 20 நாடுகளில் சிக்கி தவித்த 28 ஆயிரத்து 843 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 534 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் சவுதி அரேபியாவில் இருந்து வந்த 16 பேருக்கும், ஓமன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 4 பேருக்கும், குவைத், கத்தார், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 77 ஆயிரத்து 624 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்தது.

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 55 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 110 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 26 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 42 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் செய்திகள்