கொரோனா சிகிச்சையில் இருந்த 26 பேர் வீடு திரும்பினர்

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 143 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

Update: 2020-07-11 04:35 GMT
சிவகங்கை,

சிகிச்சை பெற்றவர்களில் 26 பேர் பூரண குணமடைந்ததையடுத்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை அமைச்சர் பஸ்கரன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், ஒருங்கிணைப்பாளர் சூரியநாராயணன், உதவி நிலைய அலுவலக டாக்டர்கள் முகமதுரபீ, மிதுன், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்